Breaking News

வடமாகாணசபைக்கு எதிராக வழக்காடியவர் நீதிபதியா?-ஐங்கரநேசன் குற்றச்சாட்டு(காணொளி)

அமைச்சர்கள் பதவிநீக்கப் பரிந்துரை தொடர்பில்
விவாதிப்பதற்காக வடக்குமாகாண சபையில் இன்று கூட்டப்பட்ட விசேட கூட்டத்தொடர் விசாரணைக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முடிவெடுப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் எதிர்வரும் ஒன்பதாம் திகதிக்கு விவாதத்தை ஒத்திவைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கைவிடுத்திருக்கின்றார்.

இன்றைய அமர்வின் போது வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது பேசிய அமைச்சர் வடமடாகாணசபையின் மருதங்கேணி குடிநீர் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடிய சட்டத்தரணியே இந்த விசாரணைக்குழுவில் நீதவானாக செயற்பட்டிருப்பது மிகவும் முரணானது என தனது உரையில் சுட்டிக்காட்டியதோடு விசாரணைகளில் மத்திய அரசினதோ அல்லது மாகாண சபையின் கணக்காய்வு பிரிவுகளை உள்வாங்காது அவர்களது விளக்கங்கள் கோரப்படாமல் ஊழல்,இலஞ்சம், நிதிமோசடி என்ற வாசகங்கள் மக்கள் மத்தியில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தார்.




இதனிடையே இது தொடர்பிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சபை அமர்வுகளுக்கு முன்னதாக சுமந்திரன் தரப்பு எவ்வாறு செயற்படுவதுதொடர்பாக மாவை,மற்றும் சுமந்திரன் தலைமையில் இன்றுகாலை  மாகாண சபையில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு, மார்டின் வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்றது இதில் தமிழரசுக்கட்சியின் 6 மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

வடக்கு மாகாண சபையின்அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் இன்று பெரும்பாலும் சமர்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்