Breaking News

முதல்வரின் முடிவால் பதறிப்போன சம்பந்தர்-இன்று யாழ் வருகிறார்

அரச  ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி மற்றும் சிறிலங்கா
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து வடமாகாண முதலமைச்சரை மாற்றுவது தொடர்பாக ஆளுனருடன் நேற்று கலந்துரையாடியிருந்த நிலையில் முதலமைச்சர் மிகக்கடுமையான முடிவுகளை எடுப்பார் என நேற்றே தமிழ்கிங்டொம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முதலமைச்சரின் முடிவு சிக்கலானால் சமிழரசு கட்சியின் போக்கிலி அரசியலுக்கு முடிவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் விழித்துக்கொண்ட சம்பந்தன் இன்று அவசர அவசரமாக யாழ் வருகிறார்.

முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்ட சம்பந்தர் சமாதானப்படுத்தி அவரையே தொடர்ந்தும் ஆட்சியை கொண்டுசெல்வதற்கும் தாம் கொண்டு வரஇருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்வதாகவும் ஆனால் தமக்கு ஆதரவான இரண்டு அமைச்சர்களையும் விசாரணை முடியும்வரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் மன்றாடியதாகவும் ஆனால் அதனை செய்தால் விசாரணையின்போது குறுக்கீடுகள் செய்யமாட்டோம் என்ற உத்தரவாத கடிதம் ஒப்பமிட்டு தரவேண்டும் என்றும் அவ்வாறு தந்தால் பரிசீலிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் பிந்திகிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனை பதவி நீக்கம்செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சியும் ஈபிடிபியினரும் இணைந்து வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சிக்கு கடும் எதிர்ப்புக் கிழம்பியது. இந் நிலையில் திடீர் திருப்பமாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை தொடர்புகொண்டு சமரசம் மேற்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக சம்பந்தரின் கோரிக்கையை விக்கினேஸ்வரன் ஏற்றுக்கொள்வதா என்பது பற்றி முதலமைச்சர் தனக்கு சார்பான உறுப்பினர்களோடு இன்று மனம்விட்டு பேசியதாகவும் இதுவரை முதலமைச்சர் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் முடிவெடுக்கவில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடர்புடைய முன்னைய செய்தி

முதல்வருக்கு ஆதரவான இளைஞர்கள் திரண்டனர்

முதல்வரை மாற்றுவது பற்றி ஆளுனருடன் பேச்சுவார்த்தை

சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு


விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)


முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்