முதல்வருக்கு ஆதரவாக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செலயகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக முன்றலில் அனைவரையும் அணிதிரளுமாறு, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை முதலமைச்சரை பதவி நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் வடமாகாண சபை முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன், இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது