வடக்கில் இன்று ஹர்த்தால்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணத்தில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது.
முதலமைச்சரை பதவி நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றையதினம் வடமாகாண சபை முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே, தமிழ் மக்கள் பேரவை நேற்றைய தினம் இந்த அறிவிப்பை விடுத்திருந்தது.
இந்தநிலையில் தமிழரசுக்கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வணிகர் கழகங்கள், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழகம் உட்பட ஏனைய கல்வி நிறுவனத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.