கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது? - கண்ணீர்விடும் உறவுகள்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்பார்த்து வாக்களித்ததாகவும் எனினும் தமக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.
உறவுகளை இழந்து வாழவழியில்லாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் நிகழ்வுகள் வேதனை தருவதாக உள்ளதாக மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தாம் பல உயிர்களை காவுகொடுத்துவிட்டு வாழ்ந்து வருவதாகவும், நம்பி வாக்களித்தவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போது அறிக்கைகளை மாத்திரம் விட்டுக்கொண்டிருக்க முடியாது, எனவும் அவரது காலத்தில் காணாமல்ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில் பதில் கூறவேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.