செல்லப்பிள்ளை குருகுலராஜாவை காக்க மௌனம் காத்தார் சம்பந்தன்!
சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வாய்கிழியக் கத்திக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சி இன்று இப்பிரச்சனை தொடர்பாக ஒருவரும் ஒன்றும் கதைக்கக்கூடாது இதனை முதலமைச்சரின் கையிலேயே விடுங்கோ எனத் தெரிவிப்பதற்கு தமது செல்லப்பிள்ளையான குருகுலராஜாவும் இந்த மோசடி வழக்கில மாட்டுப்பட்டுள்ளதாலும் இதனை மூடி மறைக்கவேண்டுமென்ற காரணத்தினாலுமே அவர்கள் மௌனம்காப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காலம்காலமாக வடமாகாணத்தை முடக்குமளவுக்கு அதன் செயற்பாடுகள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினர் சுமந்திரனும் வாய்கிழியக் கத்திக்கொண்டிருந்தவர்கள் இன்று மௌனம் காக்குமளவுக்கு குருகுலராஜாவும் இவ்வழக்கில் மாட்டுப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.