Breaking News

கூட்டமைப்பை எவரும் உடைக்கமுடியாது – சுமந்திரன்

எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், எந்தத் தீய சக்தியினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கேலாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையும் வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தவறு செய்தவர்களுடன் சேர்ந்து தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் அவர்கள் முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கின்றனர்.

அதேபோல் அவ்விரு கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியில் செல்லும் நிலைப்பாட்டிலும் இல்லை. ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றி என்னால் தீர்மானமாகக் கூறமுடியாது.

நெருக்குவாரங்கள் என்பவை தற்காலிகமானவை. அவற்றை சுமுகமாக முடித்துக்கொள்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். இதனைச் சாதகமாக்கத் துடிக்கும் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறியக் கனவு காண்கின்றனர் எனத் தெரிவித்தார்.