காணாமல்போனோருக்கான பணியகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்- அனைத்துலக மன்னிப்புச்சபை
மிகவும் தாமதிக்கப்பட்டு விட்ட காணாமல் போருக்கான பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
இது தொடர்பாக, அனைத்துலக மன்னிப்புச்சபையின், தெற்காசியப் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறிலங்கா மக்கள் இன்னும் நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியாது. எல்லா சமூகங்களையும் சேர்ந்த பத்தாயிரக்கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே நீண்ட காலம் காத்திருந்து விட்டனர்.
கூடிய விரைவில் காணாமல் போனோருக்கான பணியகம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையர்களின் காயங்களை நீதியால் மாத்திரமே குணப்படுத்த முடியும்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், காணாமல் போனோருக்கான பணியகத்தை உருவாக்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.” என்று கூறியுள்ளார்.