வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா ராஜனமா?
வடமாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் விசாரணைகளை நடாத்திவந்த விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் நேற்று அந்த அறிக்கை முதலமைச்சரால் சபையில் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பேற்று வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜா ராஜனமா கடிதத்தினை நேற்று மாலையே தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்திருப்பதாக தமிழ்கிங்டொத்தின் விசேட செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் குருகுலராஜா இந்த அறிக்கை தொடர்பில் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனது பதவியை ராஜனமாச்செய்வததோடு அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வந்திருந்த நிலையில் இந்த கடித கையளிப்பு இடம்பெற்றுள்ளது. கடிதம் கையளிக்கப்பட்டபோதும் அதனை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பொறுமை காக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குற்றம்சாட்டப்பட்ட மற்றைய அமைச்சரான ஐங்கரநேசன் இதனை சரியான முறையில் எதிர்கொள்ள தயாராவதாகவும் மற்றய இரு அமைச்சர்களான தமிழரசு கட்சியைச்சேர்ந்த சத்தியலிங்கம் மற்றும் ரெலோவைச்சேர்ந்த டெனீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் யாரும் ஆயராகக்கூடாது கட்சி கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்த காரணத்தால் அவர்கள் தப்பித்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சத்தியலிங்கம், டெனீஸ்வரன் தப்பியது எப்படி? (முழுமையான அறிக்கை)
சத்தியலிங்கம், டெனீஸ்வரன் தப்பியது எப்படி? (முழுமையான அறிக்கை)
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்