Breaking News

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டாது – ஐ.நா அமைப்பு கணிப்பு

சிறிலங்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகச் சிறிய வளர்ச்சியையே எட்டும் என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஆசிய பசுபிக்கிற்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழுவின் ஆய்வு அறிக்கை- 2017 நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 2016ஆம் ஆண்டு 4.4 வீதமாக இருந்த சிறிலங்காவில் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டில் 4.8 வீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில், இது 4.9 வீதமாக இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது,

சிறிலங்கா மத்திய வழங்கி இந்த ஆண்டில், 5 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கணித்திருந்த போதிலும், அதனை விட சற்று குறைவான வளர்ச்சியே ஏற்படும் என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார சமூக ஆணைக்குழு கணித்துள்ளது.