Breaking News

வடக்கு கிழக்கில் 2000 பேருக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்பு: பிரதமர் உறுதி



வடக்கு கிழக்கில் 2000 பேருக்கு அரசதுறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மற்றும் கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு ஜூலை மாத நடுப்பகுதியில் நியமனங்கள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், 3000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களிலும் பட்டதாரிகள் கவனத்தில் கொள்ளப்படவிருக்கின்றார்கள்.

எனவே அரசாங்கத்தினது வாக்குறுதிகளை ஏற்று வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் கைவிடப்பட வேண்டும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.