Breaking News

வேகமாக வெப்படைகிறது இந்தியப் பெருங்கடல் – இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்



ஏனைய எல்லா பெருங்கடல்களையும் விட இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்படைந்து வருவதாக அன்டாட்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘ஏனைய பெருங்கடல்களை விட இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதுகுறித்து கூடுதலாக கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு எம்மிடம் பதில் இல்லை.

வெப்பமடையும் காலநிலையுடன் வைத்துப் பார்க்கும் போது, இந்தியப் பெருங்கடல் வெப்பமாதல் வேகமாக இருக்கிறது.

செய்மதி கண்காணிப்புகள், வெப்பநிலை அட்டவணைகள், ஏனைய தரவுகளில் இருந்து இந்த முடிவுக்கு வர முடிகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.