கோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஜூலை 12இல் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு ஜூலை 12ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு பிரதம நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று இந்த வழக்கின் விசாரணைக்கான நாளை அறிவித்தார்.
கோத்தாபய ராஜபக்ச, நிசங்க சேனாதிபதி உள்ளிட்டவர்கள் மீது, காலிக்கு அப்பால் சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறிலங்கா கடற்படைக்கு பில்லியன் கணக்கான ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.