Breaking News

தமிழ் மக்களின் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புத் தேவை: சந்திரிக்கா



யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது. அவர்களது கோரிக்கைகளும் செவிசாய்க்கப்படவேண்டும். அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் எந்தவிதமான தடங்கல்களும் இருக்கக்கூடாது. நான் இந்த விடயத்தினை நீதியை அடிப்படையாகக் கொண்டே கூறுகின்றேன்” என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.