Breaking News

பொன்சேகாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு



போராட்டம் செய்வோரை கலகம் விளைவிப்போராக காண்பித்து அதனை அடக்குவதற்காக சரத் பொன்சேகாவிற்கு உயர் மட்ட இராணுவப் பதவி வழங்கப்படுமாயின் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.