காலைக்கதிருக்கு எதிராக ஒரு மாலைக்கதிர் (படங்கள்)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகைக்கு சவாலாக மாலையில் எதிரொலி என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வெளியாகியிருக்கிறது.
உதயன் சுடரொளி பத்திரிகையிலிருந்து விலகிய மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் நடுநிலமையோடு வெளியாவதில்லை என குற்றம்சாட்டி தான் ஒரு பத்திரிகையை காலைக்கதிர் என்ற பெயரில் புலம்பெயர் உறவுகள் சிலரின் ஒத்துழைப்போடு காலைக்கதிர் என்ற பெயரில் ஆரம்பித்திருந்தமை தெரிந்ததே.
காலைக்கதிர் ஆரம்பித்திருந்து ஒரு வாரமாக சாதாரணமாக செய்திகளை வெளியிட்டு வந்ததோடு அதன்பின்னர் உதயன் பத்திரிகையின் மறு பதிப்பாக தமிழரசு கட்சி செய்திகளையும் பேட்டிகளையும் முன்னுரிமைப்படுத்தி வெளிவந்து கொண்டிருந்த நிலையில் காலைக்கதிர் பத்திரிகையின் முக்கியமான நிதிவழங்குனரான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கொள்கை முரண்பாடுகளை காரணம் காட்டி காலைக்கதிரிலிருந்து விலகியுள்ளதாக தமிழ்கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சரவணபவனின் வாரப் பத்திரிகையின் முக்கியஸ்தர்களே எதிரொலியின் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. காலைக்கதிருக்கு சவாலான ஒரு பதிப்பை சரவணபவனின் ஆசியோடு மூர்த்தி என்பவர் தற்போது மாலையில் எதிரொலி என்ற பெயரில் வித்தியாதரனின் காலைக்கதிருக்கு எதிராக மாலைப்பதிப்பாக வெளியிட ஆரம்பித்துள்ளார் முதல் மூன்று நாட்களுக்கு இலவசப்பதிப்பாகவும் பின்னர் கட்டணம் அறவிடப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது. ஏற்கனவே வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை பலத்த சர்ச்சசைகளுக்கு மத்தியிலேயே வெளியாகியிருந்தது.
குறிப்பாக ஒட்டுக்கழுவாக இயங்கிய ஈ.பி.டி.பி கட்சியின் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையின் பதிப்புகள் இடைநிறுத்தவே அந்த இயந்திர சாதனத்தை கொண்டே வித்தியாதரன் காலைக்கதிரை அச்சிட்டு வெளியிட்டுவந்ததோடு முக்கியமான சில பணியாளர்களும் தினமுரசு பத்திரிகையாளர்களாகவே இருந்து வந்தனர்.

இந்த நிலையில் வித்தியாதரனுடனான கருத்து முரண்பாட்டின் உச்சமாக முன்னாள் வங்கி முகாமையாளரும் தொழிலதிபருமான மூர்த்தி சொந்தமாக மாலைக்கதிராக எதிரொலியை வெளியிட ஆரம்பித்திருப்பது வித்தியாதரனுக்கு தலையிடியாகவே அமையும் என்று அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உதயனுக்கு ஆப்பு வைத்தார் வித்தியாதரன்(காணொளி)
ஒரே மேடையில் சம்பந்தனும், விக்னேஸ்வரனும்(படங்கள் இணைப்பு)
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்