புலிகளுக்கு நரிகள் தலைமையா?-தமிழரசு கட்சியிடம் போராளிகள் கேள்வி
போராளிகளை இணைக்கப்போவதாக செய்திகள் வெளியானது யாவரும் அறிந்ததே. இதற்கு பதிலளிக்கும் வகையில் “புலிகளுக்கு நரிகள் தலைமை தாங்க நினைப்பது வேடிக்கையானது” என ஜனநாயக போராளிகள் கட்சியினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
தமிழர் அரசியல்அரங்கில் போராளிகளது அரசியல் பிரவேசம்தொடர்பில் நாம் கூட்டமைப்பை சந்தித்தபோது நாங்கள் உங்களுக்கு பயங்கரவாதிகளாக தெரிந்தோம்.. ஆனால் இன்று போராளிகளை தமிழரசுகட்சியின்ஊடாக அரசியல்மயப்படுத்துவதாக அறிவித்திருப்பது உங்களது அரசியல்கபடத்தனங்களில் ஒன்றாகவே நாம் பார்கின்றோம்.
நீங்கள் அழைப்பதாயின் தமிழ்த்தேசியகூட்டமைப்பினூடாக எமை அழைத்திருக்கவேண்டும். அதைவிடுத்து புலிகளுக்கு நரிகள் தலைமைதாங்க நினைப்பது……. வேடிக்கையானது.
தமிழரசுகட்சிக்கு பகிரங்கமாக சொல்லிக்கொள்கிறோம் . முதலில் கூட்டமைப்பை பதிவுசெய்யுங்கள். அங்கத்துவகட்சிகளை மதித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள். உட்கட்சிஜனநாயகத்தை மதியுங்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் பங்குதாரரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசியமக்கள்முன்னனியியை எத்தவிதமான பாகுபாடுமின்றி இனைத்து பலம்பெற்ற தமிழ்த்தேசியமாக கூட்டமைப்பாக பலமடையுமாயின் தமிழர் உரிமைதொடர்பில் இதயசுத்தியுடன் காத்திரமாக செயற்படுவீர்களானால் நாங்கள் அரசியலுக்கு வரவேண்டிய தேவையே இருக்காது அதைவிடுத்து எங்களைவைத்து உங்களை வெள்ளையடித்து கொள்வதை வன்மையாககண்டிக்கின்றோம்.
சிங்கங்கள் வேட்டையாடப்பட்டாலும் காட்டிற்கு வேட்டைக்காரன் ராஜா ஆக முடியாது. என குறிப்பிடப்பட்டுள்ளது .
தொடர்புடைய முன்னைய செய்தி