‘தமிழ் மக்கள் ஏற்காததை த.தே.கூவும் ஏற்காது’
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த விடயத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
களுதாவளையில் நேற்று நடைபெற்ற, தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“புதிய அரசியலமைப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், நாட்டிலுள்ள ஏனைய மக்கள் மத்தியில், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது அங்கிகரிக்கப்பட வேண்டும். இது சாதாரண விடயமும் அல்ல. நடைமுறைச் சாத்தியம் அற்ற விடயமும் அல்ல. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதனை நாங்கள் அடையக்கூடிய நிலைமை இருக்கின்றது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “தொலைநோக்குடனும் நிதானமாகவும் அனைவரின் ஆதரவைப் பெறக்கூடிய வகையிலும் விசேடமாக, சர்வதேச சமூகம், எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்லாத தீர்வை நாங்கள் ஏற்கமாட்டோம். ஏற்கவும் முடியாது. தீர்வு தயாரிக்கப்பட்ட பின்னர், அத்தீர்வு சம்பந்தமான விளக்கத்தை எமது மக்களுக்கு சமர்ப்பிப்பதுடன், மக்களின் ஆலோசனையையும் நாங்கள் பெறுவோம்.
மக்களின்; ஆலோசனையின் அடிப்படையில் இறுதி முடிவை நாங்கள் எடுப்போம். அதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இன்னுமொரு வாய்ப்பு மிக விரைவில் வருமென்றும் எங்களால்; எதிர்பார்க்க முடியாது” என்றார். “காணி விடயம், சட்டம் ஒழுங்கு, சமூக, பொருளாதார, கலாசார உரிமைகள் சம்பந்தமாக மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். காணாமல் போனோர், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்பட்டால், பல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். தமிழ் மக்களின் காணி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுத்துள்ள நிலையில், காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணாமல் போனோர் தொடர்பில் த.தே.கூ.வினால் பிரேரணை கொண்டுவரப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை அமுலாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை நாங்கள் கைப்பற்றி, அவற்றைப் பயன்படுத்தி எமது மக்களுடைய அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெறவேண்டிய நிலை ஏற்பட வேண்டும். மேலும், இதுவரையில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழரசுக்கட்சியின் கொள்கையின் பின்னால் நின்றுள்ளார்கள். அதுவே அரசியல் சாசனம். அதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரசுக்கட்சியின் பின்னால் மக்கள் நின்றார்கள். எதர் சம்மதம் இல்லாமல் எங்கள் மீது ஆட்சி அதிகாரம் செலுத்தப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் நீண்டகாலமாக ஜனநாயக ரீதியாக வழங்கிய தீர்ப்பு யாதெனில், இந்த நாட்டின் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே. நாம் ஆட்சி செய்யப்படுகின்றோம்.
எமது விருப்பத்தின் அடிப்படையிலோ, சம்மதத்தின் அடிப்படையிலோ அல்ல. எமது எதிர்ப்புக்கு மத்தியில் கட்டாயமாக ஆட்சி செய்யப்படுகின்றோம். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளதுடன், அவர்களின் போராட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்” என்றார். தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்லாத தீர்வை நாங்கள் ஏற்கமாட்டோம். ஏற்கவும் முடியாது. தீர்வு தயாரிக்கப்பட்ட பின்னர், அத்தீர்வு சம்பந்தமான விளக்கத்தை எமது மக்களுக்கு சமர்ப்பிப்பதுடன், மக்களின் ஆலோசனையையும் நாங்கள் பெறுவோம்.
மக்களின்; ஆலோசனையின் அடிப்படையில் இறுதி முடிவை நாங்கள் எடுப்போம். அதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இன்னுமொரு வாய்ப்பு மிக விரைவில் வருமென்றும் எங்களால்; எதிர்பார்க்க முடியாது” என்றார். “காணி விடயம், சட்டம் ஒழுங்கு, சமூக, பொருளாதார, கலாசார உரிமைகள் சம்பந்தமாக மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். காணாமல் போனோர், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்பட்டால், பல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். தமிழ் மக்களின் காணி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுத்துள்ள நிலையில், காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணாமல் போனோர் தொடர்பில் த.தே.கூ.வினால் பிரேரணை கொண்டுவரப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை அமுலாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் அதிகாரங்களை நாங்கள் கைப்பற்றி, அவற்றைப் பயன்படுத்தி எமது மக்களுடைய அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெறவேண்டிய நிலை ஏற்பட வேண்டும்.
மேலும், இதுவரையில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழரசுக்கட்சியின் கொள்கையின் பின்னால் நின்றுள்ளார்கள். அதுவே அரசியல் சாசனம். அதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரசுக்கட்சியின் பின்னால் மக்கள் நின்றார்கள். எதர் சம்மதம் இல்லாமல் எங்கள் மீது ஆட்சி அதிகாரம் செலுத்தப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் நீண்டகாலமாக ஜனநாயக ரீதியாக வழங்கிய தீர்ப்பு யாதெனில், இந்த நாட்டின் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே. நாம் ஆட்சி செய்யப்படுகின்றோம்.
எமது விருப்பத்தின் அடிப்படையிலோ, சம்மதத்தின் அடிப்படையிலோ அல்ல. எமது எதிர்ப்புக்கு மத்தியில் கட்டாயமாக ஆட்சி செய்யப்படுகின்றோம். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளதுடன், அவர்களின் போராட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்” என்றார். \