ஜனாதிபதி சட்டத்தரணியாக சுமந்திரன் நியமனம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்துறையில் பாரிய பங்களிப்பை வழங்கிய தயா பெல்பொல, ஜே.சி.வெலியமுன, சாலிய பீரிஸ், விவேகானந்தன் புவிதரன், மொஹமட் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட 25 சட்டத்தரணிகள் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 33(2)(இ) பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், ஜனாதிபதி மைத்திரிபாலவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.