நடிகர் சத்யராஜிக்கு கமல்ஹாசன் தனி பாணியில் பாராட்டு...!!!
கமல்ஹாசன் எப்போதும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போதெல்லாம் இவர் டுவிட்டரில் எந்த ஒரு கருத்தையும் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றார்.
இவர் சமீபத்தில் சத்யராஜ் பாகுபலி-2விற்காக கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்ததை பார்த்து, தனக்கே உரித்தான பாணியில் கலக்கல் டுவிட் ஒன்றை செய்துள்ளார்.
இதில் சத்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் விருமாண்டி படத்தில் இடம்பெற்ற வசனத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார் ‘மன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன், சத்யராஜ் நீங்கள் பெரிய மனுஷன்’ என்று அதில் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.