நடிகர் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த முருகேசன் மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து நடிகர் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
தனுஷ் தன்னுடைய மகன் என்றும் அவரிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் தங்களுக்கு தேவையில்லை என்றும், அவர் தங்களது மகன் என்ற உரிமை மட்டும் போதும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தீர்ப்பு திகதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டர்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. இந்த வழக்கின் ஒரு பகுதியாக தனுஷூக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தகவலை மறுத்த தனுஷ் தரப்பு இந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரியிருந்தது. இதனையடுத்து தனுஷின் கோரிக்கையை ஏற்று இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.