Breaking News

வீணடிக்கப்படும் எதிர்பார்ப்புக்கள் செ. சிறி­தரன்

யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் நிலை­மா­று­கால
நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வாழ்வில் விமோ­ச­னத்தை ஏற்­ப­டுத்தப் போவ­தா­கவும் புதிய அர­சாங்கம் போக்கு காட்­டி­யி­ருந்­தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, புதிய அர­சாங்­கமும் ஒரே குட்­டையில் ஊறிய மட்டை என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்கள் கண்­டு­கொண்­டார்கள்

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற முன்­னைய அர­சாங்கம் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளிலும் பார்க்க, யுத்த வெற்­றியைக் கொண்­டா­டு­வ­திலும், வெற்றிக் களிப்பை அனு­ப­விப்­ப­திலும், அந்த வெற்­றியை உள்­ளூரில் பொது­மக்கள் மத்­தி­யிலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் தனது அர­சியல் பிர­சா­ரத்­துக்­காகப் பயன்­ப­டுத்­து­வ­தி­லேயே குறி­யாக இருந்­தது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணு­வத்­தி­னரை முதன்­மைப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்­கான வச­திகள் வாய்ப்­புக்­களை அதி­க­ரிப்­ப­திலும், அவர்­களை சிவில் நிர்­வாகச் செயற்­பா­டு­களில் முதன்­மைப்­ப­டுத்­து­வ­தி­லுமே மிகுந்த அக்­க­றை­யோடு செயற்­பட்­டி­ருந்­தது. பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை ஆற்றி அவர்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்த மனக்­க­சப்பை இல்­லாமல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முயற்­சிக்க வில்லை.

அது மட்­டு­மல்­லாமல் அவர்­க­ளுக்கு எதிர்­காலம் பற்­றிய நம்­பிக்­கையை ஊட்­டு­வ­தற்கும் போருக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் அவர்­களின் மறு­வாழ்­வுக்கு சாத­க­மான நிலை­மை­களை உரு­வாக்­கு­வ­திலும் அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாகச் செயற்­ப­ட­வில்லை.

தனது யுத்த வெற்­றியை நிலை­நாட்­டு­வ­தற்­கான போர் வெற்றிச் சின்­னங்­களை உரு­வாக்­கு­வ­திலும், இரா­ணு­வத்தின் வீர­தீரப் பிர­தா­பங்­களை தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் பரப்­பு­வ­தி­லேயே அந்த அர­சாங்கம் அதிக கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. யுத்த காலத்தில் தென்­னி­லங்­கையில் இருந்த சிங்­கள மக்கள் செல்ல முடி­யா­தி­ருந்த வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் மூலை முடுக்­கு­க­ளுக்கு அவர்கள் உல்­லாசப் பய­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கும், அத்­த­கைய பய­ணங்­க­ளின்­போது, இரா­ணு­வத்­தி­னரை வீரம் மிகுந்த கதா­நா­ய­கர்­க­ளாகச் சித்திரித்துக் காட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளி­லேயே அதிக நாட்டம் கொண்­டி­ருந்­தது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கும் இழப்­புக்கள், துன்­பங்கள், அழி­வு­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருந்­தார்கள் என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்­களின் சக பிர­ஜை­க­ளா­கிய சிங்­கள மக்கள் அறிந்­து­விடக் கூடாது என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருந்து அந்த அர­சாங்கம் செயற்­பட்­டி­ருந்­தது.

யுத்­தத்தில் வெற்றி பெற்­ற­தை­ய­டுத்து, இடம்­பெ­யர்ந்­தி­ருந்த மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தா­கவும், அவர்­க­ளுக்­கான மறு வாழ்வு நட­வ­டிக்­கை­களைப் பெரிய அளவில் முன்­னெ­டுப்­ப­தா­கவும் முன்­னைய அர­சாங்கம் போலி­யா­ன­தொரு தோற்­றத்தை சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கும் காட்­டு­வதில் மிகத் தீவிர கவனம் செலுத்திச் செயற்­பட்­டி­ருந்­தது. இந்தப் போலித் தோற்­றத்தைக் காட்­டு­வதன் ஊடாக, யுத்தப் பேர­ழி­வு­க­ளினால் சிதைந்து போன வடக்­கையும் கிழக்­கையும் மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தான ஒரு போக்கைக் காட்டி, அதற்­கென பெரு­ம­ள­வி­லான நிதியை, கொடை­யா­கவும் கட­னா­கவும் பெற்­றுக்­கொள்­வதில் அதிக ஈடு­பாடு காட்டி, அதில் முன்­னைய அர­சாங்கம் வெற்­றியும் கண்­டி­ருந்­தது என்றே கூற வேண்டும்.

ஆயினும் யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து. நாட்டில் இயல்­பான ஒரு சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவும், ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் போக்கு காட்­டிய மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சாங்கம் யுத்­தத்­திற்குப் பின்னர் ஆறு வரு­டங்­க­ளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடி­யாமல் போய்­விட்­டது,

இரா­ணுவ மய­மாக்­கலில் தீவிர கவனம் செலுத்தி, எதேச்­ச­தி­கார போக்கில் நடத்தி வந்த முன்னாள் ஜனா­தி­ப­தியின் அர­சியல் பயணம் 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லுடன் தடைப்­பட்டுப் போனது. அந்த ஆண்டு தொடர்ந்து இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் மஹிந்த ரா­ஜ­பக்­ஷவின் ஆட்­சிக்கு மக்கள் முடிவு கட்­டி­யி­ருந்­தார்கள்.

மிகுந்த நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மா­கி­யி­ருந்த புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை நல்­லாட்சி அர­சாங்­க­மாக மக்கள் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள். குறிப்­பாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் புதிய அர­சாங்­கத்தின் மீது மிகுந்த நம்­பிக்­கையைக் கொண்­டி­ருந்­தார்கள்.

அதற்­கேற்ற வகையில் யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வாழ்வில் விமோ­ச­னத்தை ஏற்­ப­டுத்தப் போவ­தா­கவும் புதிய அர­சாங்கம் போக்கு காட்­டி­யி­ருந்­தது.

ஆனால் காலம் செல்லச் செல்ல, புதிய அர­சாங்­கமும் ஒரே குட்­டையில் ஊறிய மட்டை என்­பதைப் பாதிக்­கப்­பட்ட மக்கள் கண்­டு­கொண்­டார்கள். ஆனால், தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையோ, புதிய அர­சாங்­கமே எல்­லா­வற்­றையும் அள்ளித்தர வல்­லது, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப் போகின்­றது, புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வரு­வதன் ஊடாக அர­சியல் தீர்வை 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்­போ­கின்­றது என்று தமிழ் மக்கள் மத்­தியில் பெரு­ம­ளவில் பிர­சாரம் செய்து அவர்­களின் நம்பிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்கும், தமிழ் தரப்பின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் எதுவும், தென்­ப­கு­தியில் உள்ள பௌத்த சிங்­களத் தீவிர அர­சியல் சக்­தி­களை நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக உசுப்­பி­விட்டு, புதிய ஆட்­சிக்கு நெருக்­க­டிகள் ஏதும் உரு­வா­கி­விடக் கூடாது என்­பதில் தீவிர கவனம் செலுத்தி வந்­தது.

ஆட்சி மாறி­ய­பின்பும், இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள எதிர்­பார்த்த அளவு வேக­மாக காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை, அதனால், இரா­ணு­வத்­திடம் காணி­களைப் பறி­கொ­டுத்­து­விட்டு, அகதி முகாம்­க­ளிலும் உற­வினர்,நண்­பர்­க­ளது வீடு­க­ளிலும் வாடகை வீடு­க­ளிலும் அவ­லப்­பட்­டி­ருக்­கின்ற இடம்­யெர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றும் நட­வ­டிக்­கைகள் தடைப்­பட்­டி­ருந்­த­தையும், தமிழ் அர­சியல் கைதி­களின் விடுதலை குறித்து கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. என்­ப­தையும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் உரிய முறையில் பொறுப்பு கூறாமல் அரசு காலம் கடத்­து­கின்­றது என்­ப­தையும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தெளி­வாக உணரத் தலைப்­பட்­டார்கள்.

இத்­த­கைய உணர்வின் மூலம் அர­சியல் ரீதி­யான ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை ஆற்­றத்­தக்க வகையி­லான அர­சியல் நட­வ­டிக்­கைகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதுவும் அவர்­க­ளு­டைய ஏமாற்­றத்தை அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கின்­றது.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை மேலும் பாதிக்கச் செய்யும் வகையில் அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

தமிழ், சிங்­கள புத்­தாண்­டை­யொட்டி அவர் வெளி­யிட்­டி­ருந்த செய்­தியில் இரா­ணு­வத்­தினர் யுத்­தத்தில் பெற்ற வெற்­றியைப் போற்றித் தக்க வைக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தாரே தவிர, யுத்­தத்தின் பாதிப்­பு­களில் இருந்து மீள முடி­யாமல் இன்னும் தவித்துக் கொண்­டி­ருக்­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்­கையில் மலர்ச்சி ஏற்­பட வேண்டும் என்­பதை அவர் குறிப்பிட­வில்லை.

'பிற்­போக்கு சிந்­த­னை­க­ளி­லி­ருந்தும், பழமை­வாதப் போக்­கி­லி­ருந்தும் விடு­பட்டு, புதிய மனி­தான உரு­வாக வேண்டும் என்­பதே சித்­திரைப் ,புத்­தாண்டு காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சம்பிர­தா­யங்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்த எதிர்­பார்ப்­பாகும். அவ்­வாறு புதிய சிந்­த­னை­யுடன் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­த­னா­லேயே புத்­தாண்டு எமது வாழ்வின் புதி­ய­தொரு ஆரம்­ப­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆகை­யினால், வென்­றெ­டுத்த வெற்­றியை மேலும் நிலை­பெறச் செய்­வ­துடன், நல்­லி­ணக்கம், சக­வாழ்வு ஆகி­ய­வற்றை பேணும் நாடாக, பல­மாக எழுச்சி பெறுவோம் என மலர்ந்­துள்ள இந்த புத்­தாண்டில் உறுதி கொள்வோம்' என

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது புத்­தாண்டு செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்தப் புத்­தாண்டில் பேண விரும்­பு­கின்ற நல்­லி­ணக்கம், சக­வாழ்வு என்­ப­வற்றை நாட்டில் உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை புதிய அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் மேற்­கொள்­ள­வில்லை என்­பதை, வடக்­கிலும் கிழக்­கிலும், தமது காணி­க­ளுக்­கா­கவும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தற்­கா­கவும், பாதிக்­கப்­பட்ட மக்கள் முன்­னெ­டுத்­துள்ள போராட்­டங்­களும், தமது வாழ்­வா­தா­ரத்­திற்­கு­ரிய வேலை வாய்ப்பை ஏற்­ப­டுத்தித் தர­வேண்டும் என்று வடக்­கிலும் கிழக்­கிலும் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் மேற்­கொண்­டுள்ள போராட்­டங்­களும் அமைந்­தி­ருக்­கின்­றன.

புத்­தாண்டு செய்­தியில் மட்­டு­மல்ல. பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊடக பிர­தா­னி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதும், அவர் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை ஆறு­த­ல­டையச் செய்யத் தக்க வகை­யி­லான கருத்­துக்கள் இடம்­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் பல­மாகக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை அர­சாங்­கத்­திற்கும் பொது­மக்­க­ளுக்கும் அதி­க­மா­கவே இருக்­கின்­றது. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டவோ அல்­லது தீவி­ர­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லான ஒரு போராட்டம் நிக­ழவோ கூடாது என்­பதில் அர­சாங்­கமும், அர­சி­யல்­வா­திகள் மட்­டு­மல்­லாமல் பொது­மக்கள் அனை­வ­ருமே உறு­தி­யான கருத்தைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆனால் நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்து ஊட­கத்­து­றை­யி­ன­ருக்குக் கருத்து வெளி­யிட்­டுள்ள ஜனா­தி­பதி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது பற்­றியோ நிலை­மா­று­கா­லத்தில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் பற்­றியோ ஆணித்­த­ர­மான கருத்­துக்கள் எத­னையும் வெளி­யி­ட­வில்லை.

காணி­க­ளுக்­கா­கவும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கவும், தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கா­கவும் நடை­பெ­று­கின்ற போராட்­டங்கள் மற்றும், வேலை­வாய்ப்பு கோரி நடத்­தப்­ப­டு­கின்ற பட்­ட­தா­ரி­களின் போராட்டம் பற்­றியும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்ற போதிலும், அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்து ஆக்­க­பூர்­வ­மான கருத்­துக்கள் அவ­ரி­ட­மி­ருந்து வெளிப்­ப­ட­வில்லை. நல்­லி­ணக்­கமும் நிலை­மாறு கால நீதிக்­கான செயற்­பாடும் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­மட்டில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. நல்­லி­ணக்கம் என்­பது வெறும் பேச்­ச­ளவில் நிறை­வேற்­றப்­படக் கூடிய விட­ய­மல்ல.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற முன்­னைய அர­சாங்கம் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளிலும் பார்க்க, யுத்த வெற்­றியைக் கொண்­டா­டு­வ­திலும், வெற்றிக் களிப்பை அனு­ப­விப்­ப­திலும், அந்த வெற்­றியை உள்­ளூரில் பொது­மக்கள் மத்­தி­யிலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் தனது அர­சியல் பிர­சா­ரத்­துக்­காகப் பயன்­ப­டுத்­து­வ­தி­லேயே குறி­யாக இருந்­தது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணு­வத்­தி­னரை முதன்­மைப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்­கான வச­திகள் வாய்ப்­புக்­களை அதி­க­ரிப்­ப­திலும், அவர்­களை சிவில் நிர்­வாகச் செயற்­பா­டு­களில் முதன்­மைப்­ப­டுத்­து­வ­தி­லுமே மிகுந்த அக்­க­றை­யோடு செயற்­பட்­டி­ருந்­தது. பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை ஆற்றி அவர்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்த மனக்­க­சப்பை இல்­லாமல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முயற்­சிக்க வில்லை.

அது மட்­டு­மல்­லாமல் அவர்­க­ளுக்கு எதிர்­காலம் பற்­றிய நம்­பிக்­கையை ஊட்­டு­வ­தற்கும் போருக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் அவர்­களின் மறு­வாழ்­வுக்கு சாத­க­மான நிலை­மை­களை உரு­வாக்­கு­வ­திலும் அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாகச் செயற்­ப­ட­வில்லை.

தனது யுத்த வெற்­றியை நிலை­நாட்­டு­வ­தற்­கான போர் வெற்றிச் சின்­னங்­களை உரு­வாக்­கு­வ­திலும், இரா­ணு­வத்தின் வீர­தீரப் பிர­தா­பங்­களை தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் பரப்­பு­வ­தி­லேயே அந்த அர­சாங்கம் அதிக கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. யுத்த காலத்தில் தென்­னி­லங்­கையில் இருந்த சிங்­கள மக்கள் செல்ல முடி­யா­தி­ருந்த வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் மூலை முடுக்­கு­க­ளுக்கு அவர்கள் உல்­லாசப் பய­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கும், அத்­த­கைய பய­ணங்­க­ளின்­போது, இரா­ணு­வத்­தி­னரை வீரம் மிகுந்த கதா­நா­ய­கர்­க­ளாகச் சித்திரித்துக் காட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளி­லேயே அதிக நாட்டம் கொண்­டி­ருந்­தது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கும் இழப்­புக்கள், துன்­பங்கள், அழி­வு­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருந்­தார்கள் என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்­களின் சக பிர­ஜை­க­ளா­கிய சிங்­கள மக்கள் அறிந்­து­விடக் கூடாது என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருந்து அந்த அர­சாங்கம் செயற்­பட்­டி­ருந்­தது.

உணர்­வு­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட அது நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் கட்டியெ­ழுப்­பப்­பட வேண்­டி­ய­தாகும். உணர்­வுகள் மதிக்­கப்­பட்டு, பாதிக்­கப்­பட்ட மனங்கள் ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இது வெறு­மனே அர­சியல் ரீதி­யான வாக்­கு­று­தி­க­ளி­னாலும், அர­சியல் ரீதி­யான இலா­பங்­களைக் கவ­னத்­திற்­கொண்டு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற கண்­துடைப்பு அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளி­னாலும் சாதிக்­கப்­பட முடி­யா­த­தொரு விட­ய­மாகும்.

உணர்­வுகள் மதிக்­கப்­பட்டு நல்­லு­றவு மேம்­ப­டும்­போ­துதான் நம்­பிக்­கையும் உரு­வாகும். அதன் ஊடா­கவே நல்­லி­ணக்கம் சாத்­தி­ய­மாகும். நல்­லி­ணக்­கத்தின் அடிப்­படை­யி­லேயே நிலை மாறு கால நீதிச் செயற்­பா­டுகள் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட முடியும்.

நிலை­மா­று­கால நீதிக்கான செயற்­பா­டென்­பது, உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி வழங்­குதல், நிவா­ரணம் வழங்­குதல், பாதிப்­புகள் மீள் நிக­ழா­மையை உறுதி செய்தல் ஆகிய நான்கு தூண்­களின் மேல் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டிய ஒரு கைங்­க­ரி­ய­மாகும்.

உண்­மையைக் கண்­ட­றிந்து நீதி வழங்­குதல் என்­பது யுத்­தத்தில் ஈடு­பட்­ட­வர்­களைத் தண்­டிப்­பதை மட்­டுமே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றது என்ற அர­சியல் சாயம் பூசப்­பட்ட கருத்­து­ரு­வாக்கம் தென்­னி­லங்­கையில் பர­வ­லா­கவும், ஆழ­மா­கவும் பரப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே நல்­லாட்­சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்­றுள்ள விவ­சா­யத்தைப் பின்­பு­ல­மாகக் கொண்ட நல்­ல­தொரு ஜன­நா­ய­க­வாதி என கரு­தப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் எந்தக் கார­ணத்தைக் கொண்டும் இரா­ணு­வத்­தி­னரை குற்­ற­வாளி கூண்டில் நிறுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன் என்று சூளு­ரைக்கச் செய்­தி­ருக்­கின்­றது.

அவ­ரு­டைய இந்தக் கூற்றும், அர­சியல் நிலைப்­பாடும் சிங்­கள பௌத்த மக்­களின் மனங்­களை ஆறு­தல்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்­கலாம். அதே­வேளை, இரா­ணு­வத்­தி­னரால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனங்­களை அந்தக் கூற்றும் நிலைப்­பாடும் மிக­மோ­ச­மாக கீறி காயப்­படுத்­தி­யி­ருக்­கின்­றன என்­பதை அவரும் அவர் சார்ந்­தோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்­பா­விகள் மீது இரா­ணுவ தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­க­ளையும் கார­ணமே இல்­லாமல் ஆட்­களைப் பிடித்துச் சென்று காணாமல் ஆக்­கி­ய­வர்­க­ளையும் எந்த மனித மனமும், சரி­யான காரி­ய­மாக அல்­லது சரி­யான கட­மை­சார்ந்த பணி­யாக ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டாது.

இரா­ணுவம் ஆயுதம் ஏந்­தி­ய­வர்­க­ளுடன் போர் புரிந்­ததும் அதில் வெற்றி கண்­டதும் வேறு விடயம். வெறும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளையும் கடத்திச் செல்­லப்­பட்­ட­வர்­க­ளையும் கண்­கா­ணாத முறையில் பிடித்துச் செல்­லப்­பட்­ட­வர்­க­ளையும் வலிந்து காணாமல் ஆக்­கி­ய­வர்­களை கட­மையின் நிமித்தம் பணி செய்­தார்கள் என்று ஏற்று அவர்­களை எவரும் மன்­னிக்கப் போவ­தில்லை.

எனவே, யுத்த காலத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம் என்­ப­வற்றின் கீழ் அரச படை­யி­ன­ருக்கும், அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கும் அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்த அதீத அதி­கா­ரங்­க­ளையும் அதி­கார வலு­வையும் பயன்­ப­டுத்தி நீதிக்குப் புறம்­பான செயற்­பா­டு­களை மேற்­கொண்­ட­வர்கள் முதலில் இனம் காணப்­பட வேண்­டி­யது அவ­சியம். அத்­துடன் அதீத அதி­கா­ரங்­க­ளையும் சக்­தி­யையும் அள­வுக்கு மிஞ்­சிய வகையில் - தேவை­யற்ற முறையில் பயன்­ப­டுத்­தி­ய­வர்கள் அந்தச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டி­யதும் அவ­சியம். இவைகள் நிறை­வேற்­றப்­ப­டாத வரையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்கப் போவ­தில்லை. அந்த நீதியின் அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவாரணம் கிடைக்கப் போவ­து­மில்லை. அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களும், அள­வுக்கு மிஞ்­சிய வகையில் அதி­கார பலத்தைப் பயன்­ப­டுத்­திய குற்றச் செயல்­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புகள் மீண்டும் நிக­ழா­மையை உறுதி செய்­யவும் முடி­யாமற் போகும் என்­பதில் சந்­தே­கமே இல்லை.

ஆனால், ஊட­கத்­து­றை­யினர் மத்­தியில் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐ.நா .மனித உரிமைப் பேர­வையின் 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான கால அவ­காசம் முதலில் சிறிய அளவில் நீடிக்­கப்­பட்­ட­தையும் பின்னர், 2017 ஆம் ஆண்டு அந்தக் கால அவ­காசம் மேலும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு – 2019 ஆம் ஆண்­டு­வரை நீடிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் ஆழ்ந்த திருப்­தி­யுடன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அதே­வேளை, உரிமை மீறல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இன்னும் இரண்டு வரு­டங்கள் கழிந்த பின்பே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட கால அவ­கா­சத்­திற்குள் பொறுப்புக் கூறு­கின்ற நட­வ­டிக்கைகள் முன்­னெ­டுத்து முடிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்­தையே தமிழ் மக்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளுக்­கான நீதியைப் பெறு­வ­தற்­காக இன்னும் இரண்டு வரு­டங்கள் செல்லப் போகின்­றதே என்ற கவ­லையில் அவர்கள் ஆழ்ந்­துள்ள நிலை­யி­லேயே, இன்னும் இரண்டு வருடங்களின் பின்பே பொறுப்புக் கூற வேண்டியிருக்கின்றது என்ற ஜனாதிபதியின் கருத்து வெளியாகியிருக்கின்றது. இது பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களை மேலும் பாதிப்படையச் செய்திருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் மீதும், அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை­யின் மீதும் மேலும் அவநம்பிக்கையை அதிகரிப்பதற்கான நிலைமையையே உருவாக்கியிருக்கின்றது.

ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தானவர். அவர் ஒரு இனத்திற்கு மட்டுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றவர்களுக்கோ உரித்தானவரல்ல. அத்துடன் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களுக்கு மாத்திரம் அவர் அரச தலைவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்ப­தற்காக நாடு முழுவதும் ஒரு தொகுதியாக மாற்றப்பட்டு, அதனடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்றது. அத்தகைய தொகுதி அடிப்படையிலேயே நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்து, பெரும்பான்மை பலத்தைப் பெறுபவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகின்றார். எனவே ஜனாதிபதி என்பவர் நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். அதேபோன்று ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது நடவடிக்கையின் மூலம் பொறுப்புக் கூற வேண்டியவராகவும் இருக்கின்றார்.

ஆனால் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பார், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் தமது பிரச்சினைகளை ஜனநாயக முறைப்படியும், மனிதாபிமானத்துடனும் தீர்த்து வைப்பார் என்ற அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்து அதிக அளவில் அக்கறை காட்டாத ஒருவராகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினால் நாட்டின் தலைவர் பார்க்கப்படுகின்றார்.

இந்த நிலைமை நாட்டின் ஐக்கியத்திற்கும் யுத்தம் முடிவடைந்துள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் இனங்களுக் கிடையிலான ஐக்கியம் என்பவற்றிற்கும் முரணானது. அது ஆரோக்கியமானதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்