Breaking News

ஊர்காவற்துறை மாணவர்களுக்கு துருக்கி அரசினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு



ஊர்காவற்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் துருக்கி நாட்டினால் வழங்கி வைக்கப்பட்டன.

துருக்கி நாட்டு அரசாங்கமும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வு, யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஸே;வரன், அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதேச செயலாளர் எழிலரசி மற்றும் கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.