திருப்பதி அருகே விபத்து - 20 பேர் உயிரிழப்பு
ஸ்ரீகாளகஸ்தியில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சித்தூர் பகுதியில் சாலையில் இருந்த கடைகளுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.
ஏர்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சாலையோரம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த சிறு வியாபாரிகள்.
ஏர்பேடு காவல்நிலையம் அருகே புத்தாலப்பட்டு-நாயுடுபேட்டை சந்திப்பில் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் 20 பேர் படுகாயம் அடைந்ததால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்து போலீசார் கூறுகையில், “டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக முயற்சித்த போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி சாலையில் இருந்த கடைகள் மீது வேகமாக சென்றது” என்றனர்.