விக்கி உட்பட 3கட்சிகள் பொது அமைப்புகள் ஜெனீவாவுக்கு கடிதம்(காணொளி)
யாழ்.சிவில் சமூக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் சிவில் சமூக அமை யத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமையத்தின் இணை பேச்சாளரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த சட்டத்தரணி குருபரன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகள் விடயங்களில் திறனாக செயற்படவில்லை. ஆகவேதான் மனித உரிமைகள் விடயத்தில் வினைத் திறனாக செயற்பட வேண்டும் என்ற நோக்கிலேயே ஐ. நா மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நாங்கள் மனித உரிமைகள் பேரவையில் பங்கெடுக்க மாட்டோம் என இலங்கை கூறினாலும் தற்போது பங்கெடுத்து விட்டு ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் தற்போது பேரவை இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை உடந்தையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச யதார்த்தம் எங்களுக்கு முழுமையாக விளங்கியிருக்கிறது என்பதற்கப்பால் இலங்கை தொடர்பான யதார்த்தம் எங்களுக்கு நன்றாக விளங்கியிருக்கின்றது எனத் தெரிவித்த சட்டத்தரணி குருபரன், இலங்கை அரசாங்கத்தினால் கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெறாது என்பது தெளிவாகியுள்ளது.
அதேவேளை, மனித உரிமை பேரவையால் அடுத்த கட்ட நகர்வாக பாதுகாப்பு சபைக்கு இலங்கை விவகாரம் கொண்டு செல்லப்பட்டாலும் ரஷியா, சீனா போன்ற நாடுகளினால் நிராகரிக்கப்படும் என்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்பதும் தெரியும்.
ஆனாலும் மனித உரிமை பேரவை தங்களுடை நம்பகத் தன்மையை பேணுவதற்காக கால அவகாரம் வழங்காமல் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் குருபரன் தெரிவித்தார் தெரிவித்தார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்