அரச சொத்துக்களை விற்றுச் சாப்பிடவில்லை என்கிறார் மஹிந்தர்!
எமது ஆட்சியில் மக்களது நலனுக்காக சொத்துக்களின் பெறுமதியை அதிகரித்து, அவற்றை விற்பனை செய்யாது பாதுகாத்தோம். ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அனைத்துச் சொத்துக்களையும் விற்றுச்சாப்பிட்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தும்முல்ல சம்புத்த ஜயந்தி மத்திய நிலையத்தில் நேற்றையதினம் (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்விலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
“இலங்கையில் தற்போது மோசமடைந்து வரும் பொருளாதாரநிலைக்கு அரசு பின்பற்றிவரும் கொள்கைகளே காரணமாகும். உரிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள்கூட பெறப்படுவதில்லை.
மேலும் இந்த அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான நிபுணத்துவத்தினைக் கொண்டிருக்கவில்லை. இதனால் சொத்துக்களை விற்றுச் சாப்பிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.