Breaking News

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: சந்திரகுமார்

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்கிழமை) கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே மேற்படி கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டரீதியாக அணுகப்பட்டு யார் பிழை செய்திருந்தாலும் கடந்தகாலத்தில் ஈ.பி.டி.பி மட்டுமல்ல, போராட்ட இயக்கங்கள் பல மனித உரிமை மீறல்களால் நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுள்ளார்கள். இதில் ஈ.பி.டி.பி மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது.

ஈ.பி.டி.பி தவறுவிட்டிருந்தால் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் படவேண்டும் என்பதில் எந்தவிதமாக மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஈ.பி.டி.பி சில மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டது தொடர்பாக இப்பொழுது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடைபெறுகின்றது எனவும் சிலர் தண்டனையும் பெற்றிருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.