அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளகப் பொறிமுறையே அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.
இந்த நிலையிலேயே அனைத்துலக நீதிபதிகளின் பங்கேற்புடன் நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பேரணிகள் நேற்று நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு,வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டதுடன், ஐ.நாவுக்கான மனுக்களும் கையளிக்கப்பட்டன.