Breaking News

கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது – மறுக்கிறது இலங்கை

போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் நீதித்துறை மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்திருக்கிறது. எமது நீதித்துறை மிகவும் பலமானது. எமது பிரச்சினைகளைத் தீர்க்கின்ற ஆற்றல் எமக்கு உள்ளது.

எந்தவொரு விசாரணையிலும், வெளிநாட்டு நீதிபதிகளையோ, சட்டவாளர்களையோ பங்கேற்க நாம் அனுமதிக்கமாட்டோம்.

இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரும்  அரசாங்கமும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.