மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்க மாட்டோம்: ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படமாட்டாது, மேலும் பலப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது விமலவீர திசாநாயக்க எழுப்பிய வினாவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளித்து கொண்டிருந்த போதே பிரதமர் இடையில் குறுக்கிட்டு மேற்படி பதிலளித்துள்ளார்.
முன்னைய ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை குறைத்தது போன்று மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கக்கப்பட மாட்டாது.
அத்துடன் அமைச்சு பாதுகாப்பின் கீழேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்திருந்தார்.