பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி
பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க தற்போதைய அரசாங்கமும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22ம் நாள் முதல் தென் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுக்கு இவ்வாறு இராணுவப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கி கேணல் பதவி வழங்கியமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தியையும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கமும் மஹிந்தவின் பாதையை பின்பற்றி அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.