அச்சுறுத்தலுக்கு அடிபணியோம்; மண்மீட்பு போர் தொடரும்
கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை இன்று ஐந்தாவது நாளாக முன்னெடுத்துள்ளனர்.
128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததையடுத்து கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் எத்தகைய அச்சுறுத்தலை விடுத்தும் தமது போராட்டத்தை நிறுத்திவிட முடியாது எனவும் சொந்த மண்ணில் கால் பாதிக்கும் வரை தமது மண்மீட்பு போர் தொடருமெனவும் தெரிவித்துள்ளனர்.