Breaking News

நாயாற்றுப்பகுதியில் அத்து மீறும் தென்னிலங்கை மீனவர்கள்



முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் இந்த ஆண்டு அதிகளவான தென்னிலங்கை மீனவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை மீனவர்களுக்கு துணையாக கடற்தொழில் திணைக்களம் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

செம்மலை- நாயாற்றுப்பகுதியிலுள்ள மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்பகுதி மீனவர்களின் வருகை தொடர்பாகவும் எழுபத்தெட்டுப் படகுகளைத்தவிர கூடுதலாக இருநூற்று மூன்று படகுகளுக்கு கொழும்பிலிருந்து அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும் அதில் இருபத்துமூன்று படகுகளை நாயாற்றின் முகத்துவாரத்தின் ஊடாக நீரேரியில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தமக்கு மீனவர்கள் தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து நாயாறு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக மூன்று பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாட ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களுடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.