Breaking News

சொந்த நிலத்தை மீட்கும் வரை போராட்டம் தொடரும்

கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை இன்று ஆறாவது நாளாக முன்னெடுத்துள்ளனர்.


2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து பொதுமக்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பிரதேசதங்கள் இராணுத்தால் கையகப்படுத்தபட்டது.

இந்த நிலையில் கேப்பாபுலவு 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததையடுத்து கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் கேப்பாபுலவு மக்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.