Breaking News

ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டு அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாகவே ஜனாதிபதியில் இன்றைய யாழ். விஜயம் அமையவுள்ளது. பொதுமக்களின் முறைப்பாடுகளை நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் குறித்த அலுவலகம் அமையவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி பலாலியில் இடம்பெறவுள்ள படையிலிருந்து ஓய்வுபெற்ற படையினரை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றிலும் கலந்துக் கொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்து, பலாலியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்விலும் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.