Breaking News

கேப்பாபுலவு விடுவிப்பின் இரகசியம் இதுதான்(காணொளி)


"இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற
கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது.

அதில் கலந்துகொண்ட சுமந்திரன் தரப்பு வாதிகளாக கலந்துகொண்ட கொழும்பு இந்துக்கல்லூரி மாணவன் பேசும்போது கேப்பாபுலவு நிலவிடுவிப்பு எவ்வாறு உடனடியாக விடுவிக்கப்பட்டது தொடர்பாக சுமந்திரனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியத்தை மேடையில் கூறி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

கேப்பாபுலவு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் ஜெனாதிபதியுடன் கலந்துரையாடி அதற்குரிய ஒழுங்குகளை செயற்படுத்தியதன் காரணமாகவே உடனடியாக காணி விடுவிக்கப்பட்டது ஆனால் அது சம்பந்தன் ஐயாவின் செயலால்தான் நடைபெற்றது என்பது அந்த மக்களுக்கே தெரியாமல் அவரது ராஜதந்திரம் உள்ளது என அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.



அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து இரு இந்துக்கல்லூரி விவாதிகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வெளிக்கொண்டுவரும் முகமாக அமைந்திருந்தது.

கொழும்பு இந்து வாதிகளாகவும் யாழ் இந்து பிரதிவாதிகளாகவும் இருந்தனர். கொடுத்த தலைப்பில் சமரசமின்றி விவாதித்து சம்பந்தன் சுமந்திரனுக்கெதிராக யாழ்இந்துக் கல்லூரி மாணவர்கள் முக்கியமாக 12 குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களோடு மேடையில் காட்டி உரையாற்றினார்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அரங்கு நிறைந்த கரகோசம். சுமந்திரனுக்காக கொழும்பு இந்துகல்லூரி மாணவர்களும் அவரை கேள்வி கேட்பதற்கான பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியும் பங்குபற்றியிருந்தன என அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சொல்லாடலின் ஒருபகுதி உங்களுக்காக இணைக்கப்படுவதோடு மிகவிரைவில் முழுமையாக இணைக்கப்படும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.







யாழ் இந்துவின் மைந்தர்கள் இவர்கள்தான்








முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்