Breaking News

கிளி மக்களுக்கு கண்ணைக்கட்டிவிட்டு விமானத்தில் யாழ் சென்ற ஜெனாதிபதி(படங்கள்)


கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களினால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (சனிக்கிழமை) 13ஆவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், இன்றைய தினம் உறவினர்கள் கறுப்பு துணியினால் கண்ணைக் கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று ஜெனாதிபதி யாழ் வருவார் என எதிர்பார்த்த காணாமல்போன உறவுகள் தங்கள் கண்களை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈபட அதனை கண்டுகொள்ளாத இலங்கை அரச தெலைவர் மைத்திரிபால மற்றும் சின்னக்கதிர்காமரும் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளதாக காணாமல் போன உறவுகள் ஆதங்கப்படுகின்றனர்.

ஜெனாதிபதி யாழ் வரும்போதாவது எங்களை பார்த்து மனமிரங்கி ஏதாவது உத்தரவாதம் தருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து பாராமுகமாக செயற்படுவது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளையும், இலங்கை அரசையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் கடுமையாக சாடினர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் மற்றும் காணி விடுவிப்பு போராட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி நகர் மக்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது பேரணியாக சென்ற ஆதரவாளர்கள், கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று அங்கு மேலத்pக அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வகையிலேயே குறித்த மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவருக்கான குறித்த மகஜரின் பிரதி, வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களிடம் கையளிக்கப்பட்டது.





தொடர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி கோவில்வரை நடைபவனியாக சென்றவர்கள், அங்கு சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் மகஜர் கையளித்துள்ளனர்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்