மென்வலுவுக்கு சவாலான யாழ் ஊடகவியலாளர்கள்(படங்கள்)
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் அழைத்திருந்தது. பெரும்பாலான ஊடகவியலாளர்களுக்கு தபாலிலும் தொலைபேசியிலும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அந்த அழைப்பை நிராகரித்திருந்தனர்.
இருந்தும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் மறுபதிப்பான காலைக்கதிர் பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன், தினக்குரல் பிரதம ஆசிரியர், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்ரர் அண்மைக்காலமாக நல்லாட்சி தொடர்பில் அடிக்கடி கட்டுரைகளை எழுதி மென்வலுவுக்கு சவாலாக இருந்த எழுத்தாளர் நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் வழங்கும் நோக்கம் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதன் வாயிலாக தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சியையும் த.தே.கூட்டமைப்பின் மென்வலுவையும் கேள்விக்குட்படுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்பதையும் இனிவரும் காலங்களில் உதயன் பத்திரிகையின் மறுபதிப்பாக வரும் காலைக்கதிர் மற்றும் மாவை சேனாதிராசாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் தினக்குரல் டான் ரிவி தயா மாஸ்ரர் போன்றவர்களின் செயற்பாடுகளைப்போன்றே ஏனையவர்களும் செயற்பட வேண்டும் என இந்தியா விரும்புகின்றது.
இதற்கேற்றால்போல நல்லாட்சியையோ த.தே.கூட்டமைப்பில் தலைமை எடுக்கின்ற முடிவுகளை கேள்விக்குட்படுத்தும் கட்டுரைளையோ செய்திகளையோ இந்தியா விரும்பபோவதில்லை மாறாக இருக்கின்ற நிலமைகளை அவ்வாறே பேணி அரசு தருவதை பெற்றுக்கொள்வதற்கு த.தே.கூட்டமைப்பின் தற்போதைய தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே இவ்வழைப்பின் நோக்கம் எனச்சொல்லப்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் மேற்படிப்பை மேற்கொள்வது அவர்களின் தனிமனித ஆளுமையையும் ஊடகத்துறை வளர்ச்சியாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அதுவே மறைமுகமான இந்திய இலங்கை கூட்டு சிந்தனையை தமிழர் மனங்களில் விதைக்கும் நோக்குடன் இல்லாதிருப்பதை ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் மனத்தில் கொள்ள வேண்டும்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்