Breaking News

கொட்டும் மழையிலும் நான்காவது நாளாக தொடரும் நிலமீட்பு போராட்டம்

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் என கோரி கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்துக்கு முன்பாக இன்று நான்காவது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.


இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் கேப்பாப்புலவின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக திரண்டு இராணுவத்துக்கு எதிராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்களை எம்மிடம் தாருங்கள் என கண்ணீர் மல்க கதறி அழுது போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மக்களின் போராட்டம் காரணமாக சிறிதுநேரம் குறித்த வாயில் ஊடாக மேற்கொள்ளப்படும் இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி வீதியினை மறிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டதோடு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் போராட்டத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்தது மக்கள் வீதியை விட்டுவிலகி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு இன்று முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில் மக்கள் தளராது மழைக்கு மத்தியிலும் வீதியோரத்தில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

128 குடும்பங்களிற்கு சொந்தமான 480 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம்இ சீனியா மோட்டைஇ பிலக்குடியிருப்புஇ சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருந்தது தற்போது  கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள்இ வீடுகள்இ பாடசாலைஇவணக்கஸ்தலங்கள்இ விளையாட்டு மைதானங்கள்இ தோட்ட நிலங்கள்இ  வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.