Breaking News

முதுகெலும்பில்லாத மைத்திரிக்கே முண்டு கொடுக்கிறோம்-சுமந்திரன்(காணொளி)


எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்
என்று கூறுபவனே முதுகெலும்புள்ளவனாவான். விசாரணைக்கு பயந்து ஓடும்போது தனக்கு முதுகெலும்பு உள்ளது என ஜனாதிபதி கூற முடியாது  எனத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு அரசாங்கத்தை காப்பாற்றும் முகமாக மேலும் இரண்டுவருட அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று நேற்று வவுனியாவில் தீர்மானம்   நிறைவேற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதோடு முன்னதாக காலஅவகாசம் வழங்கக்கூடாது என கையொப்பமிட்டு அனுப்பி வைத்த 11 உறுப்பினர்களை முட்டாள்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவர் மேலும் அண்மையில் சிவில் சமூகம் உட்பட 30 அமைப்புக்கள் ஜெனீவாக்கு மகஜர் அனுப்பியதை நினைத்து வெட்கப்படுவதாகவும். இறந்த காலத்திற்கு தீர்வை பெறுவதை விடுத்து எதிர்காலத்திற்கு முதல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமென தான தென்னாபிரிக்கா சென்றபோது கற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.



தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு இரண்டு முறை போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 41வது ஆண்டு நினைவு தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மாவட்ட சபைத் தலைவராக பதவி வகித்த செங்கலடியைச் சேர்ந்த எஸ்.சம்பந்தமூர்த்தி அவர்களின் 28வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்