சம்பந்தன் தலைமையில் வவுனியாவில் அவசர கூட்டம் ஆரம்பம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ‘வன்னி இன்’ விடுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வட மாகாண சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள யோசனை தொடர்பாகவே இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விஷேட அதிரடிப்படையினர் பாரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் இதனால் ஊடகவியலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.