காலநீடிப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை என்கிறார் சிவாஜிலிங்கம்
காலநீடிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார்.
எனினும் நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடலின் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நிபந்தனையுடன் கூடிய காலநீடிப்புக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.