Breaking News

ஜெனீவா கடிதத்தில் 3 கள்ள கையொப்பங்களை கண்டுபிடித்த சுமந்திரன்


அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கக்­ கூ­டாது
எனக்­கோரி ஐ.நா. மனித உரிமை ஆணைக் கு­ழு­விற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடி­தத்தில் தாங்கள் கையெ­ழுத்­தி­ட­வில்லை என்று

கூட்­ட­மைப்பைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் கட்­சியின் தலை­மைப்­பீ­டத்­திற்கு அறி­வித்­துள்­ள­தாக அதன் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜி. ஸ்ரீநேசன், சாந்தி சிறிஸ்­கந்­த­ராஜா, மற்றும் கே. கோடீஸ்­வரன் ஆகிய மூவ­ருமே ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­விற்­கான கடி­தத்தில் கைச்­சாத்­தி­ட­வில்லை என்றும் இந்தக் கடி­தத்தில் தாங்கள் கையொப்பம் விட முடி­யாது என மறுத்­த­தா­கவும் அப்­ப­டி­யி­ருந்தும் கையொப்­ப­தா­ரி­க­ளாக தமது பெயர்கள் அக்­க­டி­தத்தில் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் அறி­வித்­துள்­ளனர் என்றும் கூட்­ட­மைப்பின் சார்பில் சுமந்­திரன் எம்.பி. நேற்று விடுத்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.



ஐ.நா. மனித உரிமை பேர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது என்று கோரி தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எட்டு எம்.பி.க்கள் கையொப்­ப­மிட்டு கடிதம் அனுப்­பி­ய­தாக செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. சில ஊட­கங்­களில் 11 எம்.பி. க்கள் கையொப்­ப­மிட்டு கடிதம் அனுப்­பி­யி­ருந்­த­தாக செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும் இந்தக் கடி­தத்தில் தாம் கையெ­ழுத்­தி­ட­வில்லை என்று தற்­போது இந்த மூன்று எம்.பி.க்களும் மறுத்­துள்­ள­தாக கூட்­ட­மைப்பின் தலைமை தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

இந்­தக்­க­டி­தத்தில் கூட்­ட­மைப்பு எம்.பி.க்களான செல்வம் அடைக்­க­ல­நாதன், தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், எஸ். சிறி­தரன், சீனித்­தம்பி யோகேஸ்­வரன், சிவ­சக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், வியா­ழேந்­திரன், சிவ­மோகன் ஆகி­யோரும் அதற்கு மேலதிகமாக இந்த மூவரும் கைச்சாத்திட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும் தற்போது இந்த மூன்று உறுப்பினர்களும் கையொப்பமிடவில்லையென மறுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

தமிழர்களில் 11 முட்டாள்களும் 5ராஜதந்திரிகளும்?(காணொளி)

சுமந்திரனை இருத்திவைத்து போட்டுத்தாக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்(காணொளி)

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்