காணாமல் போனவர்களை சுரேஸ்,சித்தார்த்தனிடமே கேளுங்கள் -மைத்திரியிடம் அல்ல(காணொளி)
செயற்பாடுகளில் த.தே.கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ மற்றும் புளட் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களே மக்களை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்ததாக த.தே.சுட்டமைப்பின் பேச்சாளரும் த.தே.கூட்டமைப்பின் வரலாற்று ஆசிரியருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்த ஆயுதக்குழுக்கள் செய்தவற்றை மறந்து அவர்களோடு சேர்ந்து இயங்குவதற்கு சம்மதம் தெரிவித்து இயங்கிவரும் வேளையில் அவர்கள் அதனை மறந்து எமது தலையில்(தமிழரசுக்கட்சி) ஏறிநின்று மிளகாய் அரைக்க விடமுடியாது இதுவரை நாம் இது தொடர்பில் பேசவில்லை ஆனால் இனி பேசாமல் இருக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளதோடு, இனி பேசுவோம் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் தமிழரசு கட்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தின்போது அவர் ஒருமணிநேர வரலாற்று பாடங்களை தமிழரசு கட்சி தோற்றத்திலிருந்து ஆண்டு ரீதியாக இளைஞர்களுக்கு வகுப்பெடுத்து சென்றபோது அண்மையில் கொழும்பு இந்துக்கல்லுரியில் த.தே.கூட்டமைப்பு தலைமையை யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் கடுமையாக விமர்சித்தாக கூறிய சுமந்திரன் அவர்களை பொய்களை கூறி தவறாக சிலர் வழிநடாத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த பொய்களுக்கு இப்போது கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் சிக்கியிருப்பதாகவும் ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என தெரிவித்த நிலைப்பாட்டிற்கு எதிராக த.தே.கூட்டமைப்பிலுள்ள 16 உறுப்பினர்களில் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு மகஜர் அனுப்பியிருக்கிறார்கள். இவர்கள் என்ன தெரிந்து கையொப்பம் இட்டார்கள் எனவும் கேள்வி எழுப்பியதோடு எந்த முட்டாள் அந்த கால அவகாசம் வேண்டாம் எனச் சொல்லுவான் எனவும் ஆக்ரோசமாக பேசினார்.
அண்மையில் காணாமல் போன உறவுகளுக்கு ஆதரவாக ஈ.பி.ஆர் எல்.எவ் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அதுபோல யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மக்கள் தன்னையும் சம்பந்தனையுமே திட்டுவதாகவும் அவர்கள் திட்டியவேளை அருகிலிருந்த சித்தார்த்தன் இம்மக்கள் ஏன் உங்களை பேசுகின்றார்கள் எங்களை பேசினால் அது பரவாயில்லை எனத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
அவர்களுக்கு அதன் தாற்பரியம் புரியுமா எனவும் கேள்வி எழுப்பியதோடு அந்த மகஜரில் சம்பந்தன் மாவை மற்றும் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பான தான் மற்றும் இரு தமிழரசு கட்சி உறுப்பினர்களும் கையொப்பம் இடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் இளைஞர் படையணியொன்று உள்ளது இறக்கிபாருங்கள் எனச்சொன்னதை அவர்கள் ஆயுதம் தூக்க முற்படுவதாக தவறாக அர்த்தப்படுத்தியும் தனது வரலாற்று பாடத்தை நிறைவு செய்ததோடு தொடர்ந்தும் பிரதேச ரீதியாக ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆசனம் வளங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் பலர் இணைக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
முழுமையான உரை
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்