Breaking News

அபிவிருத்தி சட்டமூலத்தால் அரசின் திட்டங்களை எற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்

அண்மையில் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கென மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையான அபிவிருத்தி சட்டமூலத்தை அங்கீகரித்தால், மத்திய அரசின் சகல திட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு தள்ளப்படுவோம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு நகரில் கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார திட்டமிடல் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் இந்த சட்டமூலத்தின் பிரகாரம் உருவாக்கப்படும் 11 பேர் கொண்ட குழுவில் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூவரே நியமிக்கப்படுவர் எனக் குறிப்பிட்ட ஐங்கரநேசன், குறித்த குழுவில் வடக்கையோ கிழக்கையோ சார்ந்தவர்கள் இருப்பார்கள் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லையெனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மத்திய அரசினால் நியமிக்கப்படும் குறித்த குழுவினர் எடுக்கும் தீர்மானங்களையே மாகாண சபைகள் நிறைவேற்றவேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே அதனை வடக்கு மாகாண சபை நிராகரித்துள்ளதாக ஐங்கரநேசன் மேலும் குறிப்பிட்டார்.