எதிர்வரும் நாட்களில் இரகசியங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்- ஜனாதிபதி
அரசாங்கத்துக்கு எதிராக விரல் நீட்டிக் கொண்டிருப்பவர்கள் செய்த மோசமான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொன்றாக அடுத்துவரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பில் வைத்து தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எயார் லங்கா விமானங்களைப் பயன்படுத்தினர். பல நாட்கள் விஜயம் முடியும் வரை அவற்றை தங்களுடன் வைத்திருந்தனர். இதனால், விமான நிறுவனத்துக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது.
அத்துடன், கடந்த அரசாங்கத்தில் ஹெலிகொப்டர்கள் தன்னுடைய வீட்டின் சொந்த வாகனங்களைப் போன்று பயணம் செய்யப் பயன்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் ஒரேயடியாக கூற முடியாது.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் என்ன என்பதை தற்பொழுது இடம்பெற்று வரும் விசாரணைகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். கடந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் தவறு செய்தாலும், அவர்களும் இவ்வாறே சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.