Breaking News

சர்வதேச மட்டத்தில் புலிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளனர்..!!

விடுதலைப் புலிகள் மீண்டுத் தலைதூக்கியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பே கூறியுள்ளதென தெரிவித்துள்ள மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, இது மிகவும் பாரதூரமான விடயம் என்றும் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.


கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தினேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதே மட்டத்தில் இயங்கும் புலிகளே இதற்கான திட்டத்தை தீட்டி வருகின்றனர். வெளிவிவகார அமைச்சின் தவறான கொள்ளைகளே சுமந்திரனை குறிவைக்க காரணமாகியுள்ளது. ஆகவே அவரது உயிரை காப்பாற்றவேண்டியது அரசின் கடமையாகும்.

விடுதலைப் புலிகள் சர்வதேச மட்டத்தில் தலைதூக்கியுள்ளனர் என நாம் குறிப்பிடுகையில் அரசாங்கம் அதனை நிராகரித்து, தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றது. ஆனால் விடுதலைப் புலிகள் தலைதூக்கியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பே முறைப்பாடு பதிவுசெய்துள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்