இரண்டாவது நாளாகவும் இராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ள பிலவுக்குடியிருப்பு மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு காணியை மீள வழங்கும் திகதி அறிவுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அங்குள்ள விமானப்படையினர் தாம் கூடியிருந்த இடத்திலிருந்த மின்விளக்குகளை இடையிடையே ஒளிரவிடுவதும் அணைப்பதுமாக இருந்ததாககவும் மின்குமிழ் அணைக்கப்பட்ட நிலையில் சத்தமிட்டு தம்மை அச்சுறுத்த முற்பட்டதாகவும் தெரிவிக்கும் மக்கள் தம்மை தமது சொந்த காணியில் சென்று இருங்கள் கூறும்வரை இந்த போராட்டம் நிறுத்தப்போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்
இதேவேளை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அரசியல் தலைவர்களான வன்னிப்பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் வடமாகான சபை உறுப்பினர் து .ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.