Breaking News

சுமந்திரனுக்கான ஆபத்துக்கு அவரே பொறுப்பு – மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் உயிருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களைச் சந்தித்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் குறித்து தமது அரசாங்கம் அவதானத்துடன் இருந்தது புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தவாறே இருந்தன.

முகாம்கள் அகற்றப்படவில்லை.பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே தமது அரசாங்கம் செயற்பட்டது.ஆனால், இந்த அரசாங்கம் பாதுகாப்பைக் குறைத்தது.புலனாய்வு நடவடிக்கைகளை நிறுத்தியது.இந்த நிலையில், அவர்கள் மீண்டும் இணையலாம் என மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.