சசிகலா முதல்வராகும் பின்னணி என்ன (காணொளி)
சசிகலா முதல்வராகும் பின்னணி என்ன என்பது
தொடர்பில் இந்திய பிரபல ஊடகமான விகடன் பார்வையில்
இன்று அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஒ.பன்னீர்செல்வம் தனது முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சசிகலா முதலமைச்சர் பொறுப்பேற்று கொள்வதற்கும் முன்மொழிந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொது செயலாளருமான ஜெயலலிதா இறந்தார். அன்று இரவே அவசர அவசரமாக கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு தமிழகத்தின் முதல்வராக ஒ.பன்னீர்செல்வத்துக்கு, ஆளுநர் வித்யாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றக்கொண்ட பின்னர் தான் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையை விட்டு வெளியே வந்தது. இந்த நிலையில், 'சசிகலா தான் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் பலர் கூறி வந்தனர். இந்தச் சூழலில் டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஒரு மனதாக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியக்கப்பட்டார். அடுத்த நாள், மாலை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்துவிட்டு உறுதிமொழி எடுத்துகொண்டார் சசிகலா. அதன்பின்னர், 31-ம் தேதி நண்பகல், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக, அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார்.
கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் சசிகலா தான் முதலமைச்சராகவும் இருக்கவேண்டும் என்று கருத்து கூறி வந்தார்கள். இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல்கள் முளைக்கத் தொடங்கின. அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் பலர் அக்கட்சியை விட்டு வெளியேறவும் செய்தனர். அவர்களில் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதன் பிறகு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் சார்பில் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்று கோஷம் ஒலிக்கதொடங்கியது. 'சின்னம்மா தமிழகத்தை ஆள வேண்டும்' என்ற விளம்பர பேனர்களும் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை கட்சியின் கழக பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பொறுப்பும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்றும் அதற்கு சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்' என்று அதிகார பூர்வ அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையால், கட்சியில் நிறைய குழப்பங்களும், சண்டைச் சச்சரவுகளும் வரத் தொடங்கின.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் தமிழகத்தில் எந்த முதலமைச்சருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அதாவது குடியரசு தினத்தில் தனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் கலந்துக்கொண்ட பன்னீர்செல்வம் தேசியக் கொடியேற்றினார். வழக்கமாக, குடியரசுத் தின விழாவில் கவர்னர்தான் கொடியேற்றுவார். தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநர் என்பதால், அவர் மகாராஷ்டிரா மாநில குடியரசுத் தின விழாவில் இருந்ததால் ஒ.பன்னீர் செல்வதுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கானச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம், தமிழக மக்களிடையே ஒருவித நன்மதிப்பைப் பெறத்தொடங்கினார் பன்னீர்செல்வம். இது சசிகலாவின் குடும்பத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியாத கோபத்தை உண்டாக்கியது. இதன் விளைவாக 27 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலா "அம்மாவின் பிறந்தநாளை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்றும் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லாலாம்" என்றும் கூறினார். மேலும், "அம்மா விட்டு சென்ற இந்தக் கழக பணிகளை நாம் சிறப்பான முறையில் வழிநடத்த வேண்டும்." என்றார். இது மறைமுகமாக பன்னீர்செல்வத்துக்கு வைக்கப்பட்ட 'செக்' என்று அ.தி.மு.க. அலுவலகத்தில் செய்திகள் பரவியது. இதற்கு அடுத்தபடியாக சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களுடனும், ஜோசியருடனும் கலந்து பேசினார். அது தன்னை முதலமைச்சராக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களிடம் இருந்து செய்திகள் வந்தன.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்